/* */

எம்.மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் பொங்கல் விழா

namakkal news, namakkal news today- எம்.மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், எம்.பி சின்ராஜ் பங்கேற்றார்.

HIGHLIGHTS

எம்.மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் பொங்கல் விழா
X

namakkal news, namakkal news today- நாமக்கல் அருகே எம்.மேட்டுப்பட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், எம்.பி சின்ராஜ் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அருகில் திஷா கமிட்டி உறுப்பினர் மாதேஸ்வரன்.

namakkal news, namakkal news today- எம்.மேட்டுப்பட்டி சமத்துவரபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், எம்.பி சின்ராஜ் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், எம்.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நாமக்கல் எம்.பி சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து, படையலிட்டு பூஜைகள் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு எம்.பி சின்ராஜ் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட திஷா கமிட்டி உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jan 2023 7:45 AM GMT

Related News