/* */

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ. 4.75

namakkal news, namakkal news today -நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை  15 பைசா உயர்வு: ஒரு முட்டை ரூ. 4.75
X

namakkal news, namakkal news today -   நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா உயர்ந்து, முட்டையின் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயம்.

namakkal news, namakkal news today - நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நிலவும் முட்டை விலைக்கேற்ப, நாமக்கல் என்இசிசி முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இந்த விலையை தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு, விற்பனைக்கான கமிஷனுக்காக, என்இசிசி விலையில் இருந்து, மைனஸ் விலையை, நெஸ்பாக் என்ற பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட, கோழிப்பண்ணைகளில், மொத்தம் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில், நாமக்கல் மண்டலம் இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாமக்கல் மண்டல தேசிய ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.60ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 15 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.45 கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பர்வாலா 445, பெங்களூர் 475, டெல்லி 457, ஹைதராபாத் 430, மும்பை 492, மைசூர் 458, விஜயவாடா 470, ஹெஸ்பேட் 435, கொல்கத்தா 520.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 124 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 96 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

தற்போது புரட்டாசி மாதம் முடிந்து, ஐப்பசி மாதமாக இருப்பதால், கடந்த ஒரு வாரமாக கறிக்கோழி நுகர்வு அதிகரித்துள்ளது. தற்போது, கோழி இறைச்சி, கிலோ ரூ. 220 கடைகளில் விலையாக உள்ளது. தீபாவளி நாளில், இறைச்சி, முட்டை விற்பனை பலமடங்கு அதிகரித்தது.

Updated On: 24 Oct 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...