/* */

நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் தவறவிட்ட 301 செல்போன்கள் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 301 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீஸ் எஸ்பி ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் தவறவிட்ட 301 செல்போன்கள் ஒப்படைப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்ளை, எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் 21ம் ஆண்டு வரை தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரவேண்டி புகார்கள் பெறப்பட்டன.

இதனையடுத்து நாமக்கல் போலீஸ் எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு சைபர் கிரைம் ஏடிஎஸ்பிக்கு உத்தவிட்டார்.

எஸ்.பி உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் நடவடிக்கையால் சுமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 301 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பலர் தவறவிட்ட செல்போன்களை மீட்ட போலீசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆயுதப் படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் உரியவர்களிடம் சொல்போனை வழங்கி பேசியதாவது: தற்போது செல்போன் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அனைவரும் செல்போனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது இடங்களிலோ, ரோட்டிலோ மற்றும் பஸ்சிலோ கேட்பார் அற்று செல் போன் கிடந்தால் அதனை எடுத்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்க வேண்டும். அதன் உரிமையாளர் யார் என்று கண்டறிந்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள் என பேசினார்.

மேலும் ஆன்லைன் தொடர்பான மோசடி, செல்போன் திருட்டு, சைபர் கிரைம் போன்ற புகார்களை 155260 என்ற எண்ணிற்கும், குழந்தை திருமணம் புகார்களை 1098 க்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 181 என்ற எண்ணிற்கும் தெரியப்படுத்தலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 9 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...