/* */

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
X

தீவாவளி பட்டாசு விற்பனை கடை ( பைல் படம்)

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வருகிற நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகையின்போது, நாமக்கல் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் மூலம் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், விண்ணப்பங்களை இண்டர்நெட் மூலம் அப்லோட் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை, பான் கார்டு நகல், வாக்காளர் அட்டை அல்லது டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் கட்டணம் ரூ.500 செலுத்திய சலான், சொந்தக் கட்டிடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பெற்று வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக லைசன்ஸ், நிராகரிக்கப்பட்டால் அதற்கான உத்தரவை ஆன்லைன் மூலம் பெற்று டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

தற்காலிக பட்டாசு கடை அமைக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவேண்டும்.

விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையினை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!