/* */

பறவைக்காய்ச்சல் குறித்து நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பறவைக்காய்ச்சல் குறித்து நாமக்கல்  கலெக்டர் முக்கிய அறிவிப்பு
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

பறவைக்காய்ச்சல் குறித்து, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு வாத்துப்பண்ணையில் 1,500க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்தன. வாத்துக்களின் ரத்த மாதிரியைஆய்வு செய்ததில், அந்த வாத்துக்களுக்கு எச்5என்1 வகை பறவைக்காய்ச்சல் தாக்கம் இருந்தது உறுதியானது. இதைத்தொடந்து அந்ப்பகுதியைச் சுற்றிலும் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு கட்டுப்பாட்டு மண்டலம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்த சுமார் 20 ஆயிரம் வாத்துக்கள் கொல்லப்பட்டன. மேலும் நோய் மற்ற பகுதிகளுக்கு பரவாத வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் பகுதிக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள, ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், பண்ணையின் நுழைவு வாயிலில் சிறிய தொட்டியை அமைத்து, அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைக்கவேண்டும். பண்ணைக்கள் செல்பவர்களும், வெளியே வருபவர்களும் கிருமி நாசினியில் கால்களை சுத்தம் செய்த பிறகே செல்ல வேண்டும். பண்ணைகளில் உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், 45 அதிவிரைவுப்படை (ஆர்.ஆர்.டி. டீம்), கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணித்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கோழிப் பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவும், வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் கோழிகள் இறப்பு ஏற்பட்டால், உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் கோழிப்பண்ணையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழி மற்றும் கோழியினப்பொருட்கள் போக்குவரத்தினை அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும், பறவைகள் சரணாலயம் வனங்கள் மற்றும் நீர் இருப்பு பகுதிகளில் ஏற்படும் அசாதாரணமான பறவைகள் இறப்புகளை உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். கோழிப்பண்ணைகளில் உயிரியில் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும், பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை, தேவையான நச்சுக்கொல்லி மற்றும் மருந்துகள், உபகரணங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் இந்நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Nov 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’