/* */

நாமக்கல்லில் இன்று 914 பேருக்கு கொரோனா- 14 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இன்று 914 பேருக்கு கொரோனா-  14 பேர் பலி
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 914 பேருக்கு, இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,210 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25,663 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7,285 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 14 பேர் இறந்தனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 1 Jun 2021 3:24 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா