/* */

நாமக்கல் மாவட்டத்தில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

நாமக்கல்லில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை, கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதுக்கும் குறைவான, பல்வேறு உடற்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்கும் வகையில், கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், அரசு டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மூலம், பயனாளிகளுக்கு வயதுதளர்வு குறித்த பரிசோதனை முகாம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தாலுக்கா வாரியாக, நாமக்கல் 18, குமாரபாளையத்தில் -25 பேர், ராசிபுரம் 27, மோகனூர் 4, சேந்தமங்கலம் 15, திருச்செங்கோடு 10, ப.வேலூர் 5, கொல்லிமலை 2 பேர் என, மொத்தம் 106 பேர் பங்கேற்றனர்.

மன வளர்ச்சி குன்றிய 12 பேர், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 8 பேர், கண்பார்வை குறைபாடுடைய 9 பேர், கை, கால் பாதிக்கப்பட்ட 30 பேர், காதுகேளாத 26 பேர், ஆகிய 85 பேருக்கு வருவாய்த்துறையின், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம், மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 75 சதவீதத்துக்கும் மேல் உடற்குறைபாடு உடைய, 5 பேருக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ. 1,500 வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம், 14 பேருக்கு, மாற்றுத்திறனாளிகள் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையும், ஒருவருக்கு புதிய அட்டையும், கலெக்டரால் வழங்கப்பட்டது. டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 6 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்