/* */

ரத்த சோகை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் ரத்த சோகை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ரத்த சோகை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த நாமக்கல் கலெக்டர்
X

நாமக்கல்லில் ரத்த சோகை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் சார்பில் ரத்தசோகை ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

ரத்தசோகையானது, தன் சுத்தம் பேணுதலில் உள்ள குறைபாடுகள், குடற்புழு, உணவு பழக்கங்களின் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. ரத்தசோகையை தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல், கை கழுவுதல் ஆகியவற்றை சரியாக பின்பற்ற வேண்டும். ரத்தசோகையை பற்றி பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்துவதற்கு சுகாதாரத்துறை, உயர்கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து ரத்தசோகை குறித்து அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சுவரொட்டிகள், பிரச்சாரம் ஆகியவை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் அருகில் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் வீடுகளுக்கே சென்று உயரத்திற்கு ஏற்ற எடை சரியாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச்சத்து திரவம் வாரம் இருமுறை வழங்கப்படுவதையும், கர்ப்பிணி பெண்களுக்கு தினம்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதையும், வளரிளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை வழங்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களையும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர், ரத்தசோகை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தவாகனம் வருகிற நவ.30ம் தேதி வரை 3 மாதங்களுக்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள 15 வட்டாரங்களில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் ரத்தசோகை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடும்.

Updated On: 1 Sep 2022 11:30 PM GMT

Related News