/* */

இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு நடத்தினார்.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வித்திட்ட மையத்தில்   நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு
X

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்க முடியாத சூழல் இருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், இல்லம் தேடி கல்வித்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கவும் தமிழக முதல்-அமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாய கூடம் போன்ற பொது இடங்களில் போதிய இடைவெளியில் மாணவ, மாணவிகளை அமர வைத்து தன்னார்வலர்கள் மூலம் எளிய முறையில், தினசரி ஒன்றரை மணிநேரம் வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் மாணவ - மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள இடங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக 4,553 பெண் தன்னார்வலர்கள் மூலம் 62,083 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளி இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் வகுப்பினை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கற்பிக்கப்பட்ட பாடங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Updated On: 8 July 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!