/* */

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 14ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில்  14ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
X

பைல் படம்.

இது குறித்து வேளாண் அறிவியல் நிலைய (கேவிகே) தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு, வெண்பன்றி வளர்ப்பு என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சியில், வெண்பன்றி வளர்ப்பின் முக்கியத்துவம், இனங்கள், அவற்றை தேர்வு செய்யும் முறைகள், கொட்டகை அமைக்கும் முறை, சரிவிகித தீவனம் அளித்தல், கலப்பு தீவனம் தயாரிக்கும் முறைகள், இனப்பெருக்கம் மற்றும் நோய் தடுப்பு மேலாண் குறித்து விளக்கம் அளிக்கப்படும். விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கலந்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 9 July 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...