/* */

மோகனூர் - நெரூர் தடுப்பணை திட்டம் கைவிடல்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.700 கோடி மதிப்பிலான மோகனூர் - நெரூர் தடுப்பணை திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, விவசாயிகள் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் - நெரூர் தடுப்பணை திட்டம் கைவிடல்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு
X

பைல் படம்.

கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.700 கோடி மதிப்பிலான மோகனூர் - நெரூர் தடுப்பணை திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, விவசாயிகள் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து விவசாய முன்னேற்றக் கழக தலைவர் செல்ல ராசாமணி, பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கடந்த ஆட்சியில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா, ஒருவந்தூர் கிராமத்திற்கும் - கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவிரியில் தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வுப் பணிக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் சட்டசபை கூட்டத்தொடரில், அத்திட்டத்தை மாற்றியமைத்து, மோகனூருக்கும் - நெரூருக்கும் இடையே ரூ.700 கோடி செலவில் தடுப்பணை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஓர் ஆண்டு ஆகியும் இதை நிறைவேற்ற எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், பொதுமக்களுக்கு இத்தடுப்பணையால் பயனில்லை, நிதித்துறை பரிந்துரை செய்ததன் பேரில் இத் திட்டம் கைவிடப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி விவசாயிகளிடையே பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

ஆற்றில் தடுப்பணை அமைப்பது என்பது மழை காலங்களில் கடலில் லட்சக்கணக்கான கனஅடி ஆற்றுநீர் வீணாக கடலில் கலப்பதை, ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தேவைப்படும்போது அதை விவசாயத்திற்கும், கிராம நகர மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த ஏதுவாக இருப்பதே முக்கிய நோக்கமாகும். மேலும் தடுப்பணை அமையும் இடத்தைச் சுற்றிலும் பல கி.மீ பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அனைவருக்கும் பயனளிக்கும். இத்திட்டத்தை அறிவிப்பதற்கு முன் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில். இந்த தடுப்பணை அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துவிட்டு இப்பொழுது அதே திட்டத்தை, சென்ற ஆட்சி பொறுப்பில் இருந்த அரசு, மக்களுக்கு பயனற்ற திட்டத்தை வகுத்துள்ளதாகவும் இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறி இத்திட்டம் கைவிடப்படுகிறது என்று கூறுவது ஏற்புடைது இல்லை.

இந்த அறிவிப்பு உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்படவில்லை. இருவேறு கட்சிகளின் பூசல்களுக்கு அப்பாற்பட்டு அரசு செயல் பட வேண்டும். முந்தைய அரசு அறிவித்தத் திட்டத்தை நடப்பு அரசு கைவிட வேண்டும் என்ற தவறான அணுகுமுறைக்கு அப்பாவி மக்களையும், விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும். எனவே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட, இந்தத் தடுப்பணையை அமைப்பதற்கு தமிழக முதல்வர் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மோகனூர், காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களையும், அதனை நம்பியுள்ள விவசாயிகளையும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களையும் காத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்