/* */

மோகனூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

மோகனூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ
X

மோகனூர் அருகே மல்லுமாச்சம்பட்டியில், புதிய ரேஷன் கடையை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், பரளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மல்லுமாச்சம்பட்டி கிராமத்தில், 196 குடும்பங்களுக்காக, புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா மறற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

மோகனூர் ஒன்றிய திமுக செயலாளர் நவலடி தலைமை வகித்தார். மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம் முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 ரொக்கப்பணம் வழங்கினார். விழாõவில், அப்பகுதியில் உள்ள தூய்மைப்பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு, மோகனூர் ஒன்றிய குழுத் தலைவர் சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவர் அருக்காணி, தாசில்தார் மணிகண்டன், பிடிஓ முனியப்பன், ஒன்றிய கவுன்சிலர் வேலுபாலாஜி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பூவராகவன், அரசு வக்கீல் முத்துசாமி, திமுக கிளை செயலாளர்கள் பொன்னரசு, கவுரிசங்கர், சரவணன், முருகேசன், பசுபதி மற்றும் ராமலிங்கம் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Jan 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்