/* */

நாமக்கல் நகராட்சி வளர்ச்சிப்பணிகளை நிர்வாக இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா நாமக்கல் நகருக்கு வருகை தந்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி வளர்ச்சிப்பணிகளை நிர்வாக இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு
X

நாமக்கல் நகராட்சி மின் மயானத்தை, மாநில நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, கமிஷனர் சுதா ஆகியோர்.

நாமக்கல் நகராட்சிக்கு வந்த மாநில நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, முதலைப்பட்டியில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையப் பகுதி, ராமபுரம்புதூர் குட்டைத்தெரு, தற்போதைய பஸ் நிலையம், உழவர் சந்தை, திருவள்ளுவர் காலனி சந்திப்பு ஆகிய இடங்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் மற்றும் ரோடு வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோட்டை நகராட்சிப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், முல்லைநகரில் நடைபெற்று வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப்பணி, நகராட்சி மின்மயானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் கட்டுமானப் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

நகராட்சி துப்புரவு பணியாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கொசவம்பட்டி ஏரியில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, கமிஷனர் சுதா, இன்ஜினியர் சுகுமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 July 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!