/* */

பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கொங்குநாடு கல்லூரி வெற்றி

பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கொங்குநாடு கல்லூரி அணி வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கொங்குநாடு கல்லூரி வெற்றி
X

வெற்றிக்கோப்பையுடன் கொங்குநாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் அணியினர் உள்ளனர்.

ஈரோடு நந்தா கல்வி நிறுவன வளாகத்தில், இன்ஜினியரிங் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கான, மாநில அளவிலான 20-20 கிரிக்கெட் விளயைாட்டுப்போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதன், இறுதிப் போட்டியில் தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணியும், ஈரோடு நந்தா இன்ஜினியரிங் கல்லூரி அணியும் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணி வெற்றிபெற்று, கோப்பையை வென்றது. இம்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தொடர்நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், அதிகம் சிக்சர் அடித்தவர்கள் விருது மற்றும் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதினை கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி போராசிரியர் குமார் பெற்றார். மேலும் சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை பேராசிரியர் பாஸ்கர் வென்றார்.

சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில், இன்ஜினியரிங் கல்லூரி போராசிரியர்களுக்கான 20-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணியும், ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி அணியும் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி போராசிரியர் பரத் பெற்றார்.

கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்களை கல்லூரி சேர்மன் பெரியசாமி, முதல்வர் அசோகன் ஆகியயோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 25 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...