/* */

ஜன.2 நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

ஜன.2ம் தேதி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

HIGHLIGHTS

ஜன.2 நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
X

வடை மாலை அலங்காரத்துடன் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

நாமக்கல்லில் வருகிற ஜன.2ம் தேதி ஆஞ்சயேநர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாமிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆன்லைன்மூலம் முன்பதிவு செய்து கொண்டு பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

இது குறித்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியுள்ளதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற ஜன. 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்நேயர் கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதணை நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடைபெறும். மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் இந்த ஆண்டு முழுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறும்.

சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம்முன் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டண தரிசனம் மற்றும் தர்ம தரிசனம் இரண்டிற்கும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் வீதம் முன்பதிவு செய்யப்படும். முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியில் தரிசனத்திற்கு கியூவில் வரவேண்டும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு 500 நபர்கள் மட்டும் முன்பதிவு செய்யப்படும். hrce.tn.gov.in https://hrce.tn.gov.in/eservices/dharshanbooking.php?tid=4887&scode=6&sscode=7&t arget_type=1 என்ற இண்டர்நெட் முகவரியில் தரிசன முன்பதிவு செய்துகொள்ளலாம். திருக்கோயில் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் எச்சில் உமிழ்தல் தடை செய்யப்பட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் நாமக்கல் என்ற யூ டியூப் சேனல் மூலம் ஒளிபரப்புசெய்யப்படும். பக்தர்கள் வீடுகளில் இருந்தே நிகழ்ச்சியை காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 24 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’