/* */

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: 600 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு

சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 600 காளைகள் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில், 29 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: 600 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்பு
X

நாமக்கல் அருகே சாலப்பாளையத்தில் நடைபெற்ற, ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, சாலப்பாளையத்தில், ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்திபன் தலைமை வகித்தார். பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியை துவக்கி வைத்தார்.

இதில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 600 காளைககள் கொண்டுவரப்பட்டன. வாடிவாசல் வழியாக வந்த காளைகளை, 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அடக்கினர். காலை, 8:00 முதல், மதியம், 3:30 மணி வரை 600 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

காளைகளை அடக்கியவர்களுக்கு, ரொக்கப்பரிசு, போவணி, டேபிள், பட்டுப்புடவை, டிரஸ்சிங் டேபிள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில், 29 வீரர்கள் காயம் அடைந்தனர்.

சில முரட்டு காளைகள், ‘என்னை தொட்டுப்பார்’ என, மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட்டு, எதிர்த்து நின்று மிரட்டியது. வீரர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்து, தங்களை தற்காத்துக் கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அ,தி.மு..க, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளரும் ராகா ஆயீல் மில்ஸ் நிர்வாக இயக்குனருமான தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் சாலப்பாளையம் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 2 March 2024 12:45 PM GMT

Related News