/* */

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Namakkal news- ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பு  குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
X

Namakkal news- எர்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற, விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா பேசினார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் வட்டார,வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் வரும், எர்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்து, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், மானாவாரி பகுதி மேம்பாட்டு, ஓருங்கிணைந்த பண்ணையம் குறித்தும் விளக்கி கூறினார்.

நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன், முன்னிலை வகித்து துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதைநேர்த்தி செய்தல், பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவைகள் இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் மைய உதவி பேராசிரியர் பிருந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விவசாயத்துடன் ஒன்றையொன்று சார்ந்த கூடுதல் வருவாய் தரக்கூடிய வெள்ளாடு வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு மரக்கன்றுகள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தால், விவசாயிகள் தடையின்றி வருமானம் ஈட்டலாம் என்பது குறித்து விளக்கி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

மேலும், வேளாண் பயிர்கள் சாகுபடியில் மஞ்சள் மற்றும் நீல வண்ண ஒட்டும் அட்டைகளை பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்தழித்தல் போன்ற அங்கக பூச்சிக்கட்டுப்பாடு முறைகளை விளக்கி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவாகப் பதிலளித்தார்.

பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் உள்ளிட்டோர் பேசினார்கள். திரளான விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Sep 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்