/* */

9 நாட்களில் பெட்ரோல் ரூ.6.05, டீசல் ரூ.6.08 விலை உயர்வு: பொதுமக்கள் அவதி

கடந்த 9 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.6.05, டீசல் ரூ.6.08 விலை உயர்வு. பொதுமக்கள் வாகன உரிமையாளர்கள் பாதிப்பு.

HIGHLIGHTS

9 நாட்களில் பெட்ரோல் ரூ.6.05, டீசல் ரூ.6.08 விலை உயர்வு: பொதுமக்கள் அவதி
X

கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05ம், டீசலுக்கு ரூ.6.05ம் உயர்ந்துள்ளதால், வாகன உரிமையாளர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களில் முக்கியமானது எரிபொருளாகும். இந்தியாவில் மிக முக்கிய எரிபொருள் பெட்ரோல், டீசல் ஆகும். பொதுமக்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள் என அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் ஆகிய எரிபொருளை பயன்படுத்தியே ஆக வேண்டும். பெருமளவில் இந்த எரிபொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் சில ஆண்டுகள் முன்பு வரையில் இந்த எரிபொருட்களின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்யும். மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அத்தியாவசிய எரிபொருள் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும்போது, அவர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யும்போது நஷ்டம் ஏற்பட்டால், அந்த தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கி வந்தது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தவோ, குறைக்கவோ முடியாது.

இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருட்களின் விலையை, சர்வதேச விலைக்கு நிகராக எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது, இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை அடிக்கடி எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக உயர்த்து துவங்கின. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு இணையாக தனியார் எண்ணெய் நிறுவனங்களும் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு இந்திய முழுவதும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டதால், வாகன போக்குவரத்து பெருமளவு குறைந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனையும் குறைந்தது. இந்த நிலையிலும் எண்ணெய் கம்பெனிகள் தன்னிச்சையாக நாள்தோறும் விலையை உயர்த்தி வந்தனர். அரசு விடுமுறை நாட்களில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 5 வட மாநிலங்களில் சட்டபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு பல மாநிலங்களில் விலை குறைக்கப்பட்டது. நாள்தோறும் விலை உயர்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து அந்தந்த மாநிலங்களில் புதிய அரசுகள் பொறுப்பேற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்த தொடங்கியுள்ளன. சமையல் கேஸ்விலை ஒரே நாளில் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. 22ம் தேதி முதல் கடந்த 10 நாட்களில் 24ம் தேதி தவிர,. 9 நாட்கள் நாள்தோறும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 9 நாட்களில் பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு ரூ.6.05 உயர்த்தப்பட்டு தற்போது ஒரு லிட்டர் ரூ.108.08 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6.08 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.98.16 ஆகவும் உள்ளது. நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் அனைத்து பொதுமக்களும், போக்குவரத்து தொழிலை நடத்தி வரும் பஸ், லாரி, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாகன உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 31 March 2022 1:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  8. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  9. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  10. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!