/* */

நாமக்கல் நகராட்சியில் ஒரே நாளில் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

நாமக்கல் நகராட்சியில், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கி சுமார் ரூ.8 கோடி உள்ளது. இதைத்தொடர்ந்து வரி செலுத்தாத 22 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் ஒரே நாளில் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை வரி என சுமார் 14 ஆயிரம் பேர் ரூ.8 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பெரும்பாலானோர் வரி செலுத்த முன்வரவில்லை. மேலும் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்து வந்தது.

இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்திநகர், முருகன் கோவில் பஸ் ஸ்டாப், காதிபோர்டு காலனி, கொண்டிசெட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி இன்ஜினியர் சுகுமார் தலைமையில் மேலாளர் ஜெயகுருநாதன், துப்புரவு ஆய்வாளர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் பிரசாத் அடங்கிய குழுவினர் நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் இடங்களுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வரி பாக்கி செலுத்த முன்வராதவர்களின் வீடு மற்றும் இடங்களில் இருந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி, ஒரே நாளில் நாமக்கல் நகராட்சியில் பொக்லைன் இயந்திரம் மூலம் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நீண்ட காலமாக வரி பாக்கியை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 20 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்