/* */

‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் நடைபெற்ற ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆட்சியர் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

HIGHLIGHTS

‘காபி வித் கலெக்டர்’  நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் நடைபெற்ற ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆட்சியர் உமா கல்வி உதவித்தொகை வழங்கினார்.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும், உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில், உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன், உயர்வுக்குபடி என்ற முகாம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முகாமில் பல்வேறு தனியார் கல்லூரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தனர். இந்த முகாமில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் சந்தோஷ் குமார், கவுசல்யா, கிருஷ்ணவேனி, சத்யா, யுவராணி ஆகிய 5 பேர், குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியிலும், சுகன்யா, முத்துமாரி, செல்வி, அஞ்சலி, ரோஷினி, ஜோதி ஆகிய 6 மாணவிகள் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் விருப்பமான பட்ட வகுப்புகளை தேர்வு செய்து சேர்ந்துள்ளனர்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்லூரிகளில் உயர்கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் “காபி வித் கலெக்டர் ” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள் தங்களது உயர்கல்வியினை சிறப்பாக முடித்து, சமூகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும். மேலும் உயர்கல்வியோடு தங்களது தனித் திறமையினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ செல்வங்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் முள்ளுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த, தொழிற்கல்வி பயின்று வரும் மாணவி தீபிகாவிற்கு உயர்கல்வி உதவித்தொகையாக ரூ.50,000 க்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார். போதமலை கீழுர் மலை கிராமத்திலிருந்து மருத்துவ படிப்பு பயின்று, டாக்டரான ரமணி என்பவரை பாராட்டி, புத்தகங்களை பரிசு வழங்கினார். மேலும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 மாணவர்களுக்கு ரூ. 13,000 கல்வி உதவித்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Aug 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்