/* */

நாமக்கல் மாவட்டத்தினர் உக்ரைனில் இருந்தால்... போன் நம்பர்கள் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டில் இருந்தால் தொடர்பு கொள்ள போன் நம்பர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தினர் உக்ரைனில் இருந்தால்... போன் நம்பர்கள் வெளியீடு!
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டில் இருந்தால், அவர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் நம்பர்களை கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சவரணன், தேவணாங்குறிச்சியைச் சேர்ந்த ஜனணி, மருக்கலம்பட்டிப்புதூரைச் சேர்ந்த நர்மதா, குமாரபாளையம் தாலுக்கா வளையக்காரனூரைச் சேர்ந்த சூரியா ஆகியோர் உக்ரைன் நாட்டில் மேல் படிப்புக்காக சென்று தற்போதைய போர் சூழலில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவர, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உக்ரைன் நாட்டில் இருந்தால், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை போன் நம்பர்கள் 1077, 04286 281377 மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியார் (பொது) போன் நெ. 94450 08144 தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் தமிழக அரசின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!