/* */

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்காநதர் கோயிலில் சொர்க்காவசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்காநதர் கோயிலில் சொர்க்காவசல் திறக்கப்பட்டு, பரமபதல் வாசல் வழியாக சாமியின் ஜடாரியை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர்.

HIGHLIGHTS

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்காநதர் கோயிலில் சொர்க்காவசல் திறப்பு
X

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்காநதர் கோயிலில் சொர்க்காவசல் திறக்கப்பட்டு, பரமபதல் வாசல் வழியாக சாமியின் ஜடாரியை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர்.

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் கிழக்குப்பக்கத்தில் அருள்மிகு அரங்கநாயகி தாயார் உடனுரை அரங்காநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் மலையைக் குடைந்து குடறைக்கோயிலாக உருவாக்கப்பட்டு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் புராண சிறப்புப் பெற்றதாகும்.

இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனக்கோலத்தில் அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி நாளில் இக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் சொக்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் ஆகம விதிகளின்படி ö சார்க்க வாசல் எனும் பரமபாத வாசல் வழியாக சாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில், கொரோனா விதிமுறைகளை அனுசரித்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட கியூவில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, நகரில் மெயின் ரோடு, கோட்டை ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Updated On: 13 Jan 2022 6:30 AM GMT

Related News