/* */

அரசு மருத்துவமனையில் பணி புரிய ஆர்வமா? 75 தற்காலிக பணியாளர்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில், அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் பணி புரிய ஆர்வமா? 75 தற்காலிக பணியாளர்கள் நியமனம்
X

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிய75 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், சேந்தமங்கலம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டி நோயாளிகளின் நலன் கருதி, 10 மருந்தாளுநர்கள், 10 லேப் அசிஸ்டென்ட், 10 எக்ஸ்ரே டெக்னீசியன் ஆகிய பணியாளர்ளை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், கொரோனா நோயாளிகளுக்கு தங்குதடையின்றி சிகிச்சை அளிக்க, அத்தியாவசிய தேவையினை கருத்தில் கொண்டு 5 ரேடியோகிராபர், 10 டயாலிசிஸ் டெக்னீசியன், 5 இ.சி.ஜி டெக்னீசியன், 5 சி.டி ஸ்கேன் டெக்னீசியன், 15 அனஸ்தீசியா டெக்னீசியன், 5 மருந்தாளுநர்கள், 5 லேப் அசிஸ்டெண்ட் ஆகிய பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட துறையில் படித்து சான்றிதழ்பெற்ற, தகுதி உள்ள நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை, தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ் நகலுடன் இணைத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம், மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் 28.07.2021 அன்று மாலை 5 மணிக்குள் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும். பணிகளுக்கான நேர்காணல் 30.07.2021 அன்று 10.30 முதல் 2.00 மணி வரை நடைபெறும் போது அனைத்து உண்மை கல்வி சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும்.

ஐகோர்ட் வழிகாட்டுதல் படி, இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும். 6 மாத காலத்திற்கு மட்டும் பணி வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் எந்த இடத்தில் பணியமர்த்தப்பட்டாலும், கோவிட் - 19 தொடர்பான மருத்துவ சேவையில் பணிரிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 July 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!