/* */

நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ. 40 கோடியில் புது பஸ்ஸ்டாண்ட்

New Bus Stand -நாமக்கல், முதலைப்பட்டியில் ரூ. 40 கோடி மதிப்பில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

நாமக்கல் முதலைப்பட்டியில்    ரூ. 40 கோடியில் புது பஸ்ஸ்டாண்ட்
X

நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், நகராட்சிகள் மண்டல இயக்குனர் பொன்னையா, கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

New Bus Stand -நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய பஸ் ஸ்டாண்டுக்கு அமைச்சர் நேருஅடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் நகரில் தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட், இடப்பற்றாக்குறையால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில், நாமக்கல் - சேலம் ரோட்டில் முதலைப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம், நகாட்சி நிர்வாகத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைவிடத்தை, சில மாதங்களுக்கு முன் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலையை பஸ் ஸ்டாண்டுடன் இணைப்பதற்கான, அனுகு சாலைக்காக, ரிங் ரோடு அமைப்பதற்காகன இடம் கையகப்டுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கெள்ளுமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரிங் ரோட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையெட்டி முதலைப்பட்டி அருகில், நவீன வசதிகளுடன் முதற்கட்டமாக ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் நேரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிப் பேசியதாவது:

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 46 பஸ் ஸ்டாண்டுகள் ரூ. 267 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. 10 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, அனுகு சாலையும் அமைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும், பின்னர் மேலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். நாமக்கல் நகராட்சியில் மட்டும் பஸ் ஸ்டாண்ட் பணிகள் மட்டுமின்றி, கடந்த 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 60 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நகராட்சியில், 9 கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதால், சுமார் 176 கி.மீ மண் சாலைகள் உள்ளன. அவற்றை தார் சாலையாக மாற்ற கடந்த ஆண்டில் மட்டும் ரூ.15 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்று கூறினார்.

நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, நகராட்சி கமிஷனர் சுதா, முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, பிஎஸ்கே கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Oct 2022 4:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!