/* */

நவீன முறையில் மண்புழு உரம் தயாரிக்க நாமக்கல்லில் இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவீன முறையில் மண்புழு உரம் தயாரித்தில் குறித்த இலவச பயிற்சி வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நவீன முறையில் மண்புழு உரம் தயாரிக்க நாமக்கல்லில் இலவச பயிற்சி
X

கோப்புப்படம்

நாமக்கல் வேளாண் அறிவியில் நிலைய (கேவிகே) தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜூன் 15ம் தேதி, காலை 10 மணிக்கு, நவீன முறையில் மண்புழு உரம் தயாரித்தல் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், மண் புழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரம் தயாரிக்க இடம் தேர்வு செய்தல், மண்புழுவின் வகைகள், மண் புழுவை தேர்வு செய்தல், கழிவுகளை தேர்வு செய்தல், மண்புழு உரம் தயாரிக்கும் நவீன தொழில் நுட்பங்கள், மண்புழு உற்பத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய உத்திகள், மண்புழு உரம் சேகரித்தல், ஊட்டமேற்றிய மண்புழு உரம் தயார் செய்தல் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Jun 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?