/* */

நாமக்கல் பகுதியில் ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.7.79 லட்சம் மோசடி

நாமக்கல் பகுதியில் 2 பெண்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.7.79 லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் ஆன்லைன் மூலம் 2 பெண்களிடம் ரூ.7.79 லட்சம் மோசடி
X

பைல் படம்

Namakkal News Today - நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி பாரதி. இவர், ஒரு செல்போன் அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் அடிக்கடி துணி வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் எங்களது அப்ளிகேஷனை பயன்படுத்தி அதிக துணி வாங்கியதால், குலுக்கல் முறையில் சிறந்த வாடிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டு, ரூ.12 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் வந்தது.

அதற்கு வரி மற்றும் பதிவு செய்வதற்கான முன்பணமாக, ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 800 கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதை நம்பிய பாரதி, அவர்கள் கேட்ட முன்பணத்தை, பல்வேறு தவணையாக ஆன்லைனில் செலுத்தி உள்ளார். பல மாதங்கள் ஆகியும், அவருக்கு கார் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்த பாரதி, இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு பெண்ணிடம் மோசடி

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த களங்காணியை சேர்ந்த ஒரு பெண் ஆன் லைனில் பார்ட்டைம் வேலை தேடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, ஆன்லைன் ஜாப் மூலம், பொருட்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், வருவாய் ஈட்டலாம் என ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதை உண்மை என்று நம்பிய அந்தப்பெண் அவர்கள் கூறியபடி, முதலில் முதலில் ரூ. 200 டாஸ்க் செய்துள்ளார். அதற்கு ரூ. 329 வந்துள்ளது. அதையடுத்து, தொடர்ந்து, சிறு சிறு தொகையாக டாஸ்க் செய்து வந்துள்ளார். அதன் மூலம் மொத்தம் ரூ. 3.89 லட்சம் ஆன்லைனில் செலுத்தி உள்ளார்.

Namakkal News

ஆனால், அவருக்கு அவர்கள் கூறியபடி பணம் எதுவும் வரவில்லை. அவர் செலுத்திய பணத்தையும் எடுக்க முடியவில்லை. அதனால், ஏமாற்றம் அடைந்த அந்தப்பெண், இது குறித்து சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு, இன்னும் கூடுதலான பணத்தை டாஸ்க் செய்ய வேண்டும் அப்போதுதான், உங்கள் பணத்தை எடுக்க முடியும் என பதில் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கலைச்செல்வி, இது குறித்து ஆன் லைன் மூலம் புகார் செய்துள்ளார். இதையொட்டி நாமக்கல் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...