/* */

மலேசியாவிற்கு செல்லும் நாமக்கல் முட்டை.. முதன்முறையாக ஏற்றுமதி தொடக்கம்...

நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியா நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி துவங்கியது. மாதம்தோறும் 4 கோடி முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

மலேசியாவிற்கு செல்லும் நாமக்கல் முட்டை.. முதன்முறையாக ஏற்றுமதி தொடக்கம்...
X

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு மாநில கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக, மொத்த உற்பத்தியில் சுமார் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தினசரி லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தியாவில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து மட்டுமே முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கெனவே துபாய், மஸ்கட், கத்தார், ஆப்பிரிக்கா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளி நாடுகளுக்கு இதுவரை சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகியுள்ளன.

இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டபோதும், தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை. நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை பராமரிப்புத் துறை ஆலோனையுடன் பல ஆண்டுகளாக, இந்திய அளவில், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் பண்ணைகளுக்கு வரும் வாகனங்களுக்கும், வெளியே செல்லும் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் கோழிப் பண்ணைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இதனால் நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், உக்ரைன் போரால் பல நாடுகளில் கோழித்தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், புண்ணாக்கு உளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து, முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் முட்டை தயாரிக்கும் பண்ணைகள் நாமக்கல் மண்டலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஏற்றுமதிக்கு தடையில்லா சான்று பெற்று முட்டை ஏற்றுமதி செய்ய முடிகிறது. தற்போது முதன்முறையாக இந்தியாவில் இருந்து குறிப்பாக, நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி ஆகி உள்ளது. மலேசியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஆர்டரின் பேரில், சென்னையில் இருந்து ஏர் கார்கோ விமானம் மூலம் 54,000 முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முட்டை மாதிரிகள் மலேசியாவில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கும். அதன் அடிப்படையில் வாரந்தோறும் 20 கண்டெய்னர் மூலம் 1 கோடி முட்டைகள் என மாதம் 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு முட்டையின் தேவை மற்றும் நுகர்வு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கிய பிறகு, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாகி உள்ளதாக சிங்கராஜ் தெரிவித்தார்.

Updated On: 15 Dec 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!