/* */

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி, பெருமாள் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

namakkal news, namakkal news today- நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவேண்டி, விவசாயிகள், வளையப்பட்டி கஸ்தூரி ரங்கநாதர் பெருமாள் கோயிலில் திருக்கோடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி, பெருமாள் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

namakkal news, namakkal news today- மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவேண்டி, விவசாயிகள், ஸ்ரீ கஸ்தூரி ரங்காநாதப் பெருமாள் கோயிலில் திருக்கோடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்காவில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என். புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மனு கொடுக்கும் போராட்டம், மெழுவர்த்தி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி, நாமம் போட்டு போராட்டம், தீர்த்தக்குட போராட்டம், அக்னி சட்டி போராட்டம், புத்தகம் வாசிக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிமலையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருக்கோடி விளக்கேற்றி, சுவாமியிடம் வேண்டுதல் வைத்தால், பெருமாள் அதை நிறைவேற்றுவார் என்ற ஐதீகம் உள்ளது.

இதையொட்டி, சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், கஸ்தூரி ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருக்கோடிவிளக்கேற்றி பூஜை செய்து சுவாமியிடம் வேண்டுதல் விடுக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கொமதேக ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவகுமார், தமிழக விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Aug 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...