/* */

பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
X

பைல் படம்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விபரம்:

சந்திரசேகரன் (விவசாயி): பாரம்பரிய விவசாய கருவிகள் அழிந்து வருகிறது. அவற்றை பாதுகாப்பதுடன், கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏரி பாசனம் மேற்கொள்ளும் சிறு குறு விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் செயல்படுத்த முடியவில்லை. பாம்பு கடித்து இறந்தால் நிதி உதவி வழங்குவதற்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் பலர் அரசின் நிதி உதவி பெறமுடியாத சூழ்நிலை உள்ளது. விவசாயிகளுக்கு வயது நிர்ணயம் செய்யக்கூடாது.

ராஜேந்திரன் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர்): தமிழகத்தில், பால் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு 34 மாதங்களாகிறது. பால் உற்பத்தி செய்வற்கான தீவனம் மற்றும் இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு ரூ. 40க்கு மேல் செலவாகிறது. தற்போது அரசு ஒரு லிட்டருக்கு ரூ.32 வழங்குகிறது. தமிழகத்தில் 85 சதவீதம் கலப்பின கறவை மாடுகள் வளர்க்கப்படுகிறது. பால் விலை கட்டுபடியாகாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பிரச்சினையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

பெரியதம்பி (விவசாயி): மரவள்ளியில் மாவுப் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அவற்றை தவிர்த்து பணமாக வழங்க வேண்டும்.

மெய்ஞானமூர்த்தி (விவசாயி): தோட்டக்கலைத்துறை மூலம், 2016–17 ல் பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. பயிர்க்கடன் பெறும்போது, இன்சூரன்ஸ் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது.

பாலசுப்ரமணியன் (விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்): தனியார் வங்கிகள் பயிர்க்கடன் வழங்குவதில்லை. மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்துவதற்கான கருத்துரு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அவற்றின் நகல் எங்களுக்கும் வழங்க வேண்டும்.

குப்புதுரை (சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி): மோகனூர் சர்க்கரை ஆலையில், 2.10 லட்சம் டன் கரும்பு அரை செய்யப்பட்டு, 60 சதவீதம் பேருக்கு, கரும்புக்கான கிரையத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பாக்கி உள்ள 40 சதவீதம் பேருக்கும் பணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Updated On: 20 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!