/* */

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும்  திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
X

நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மோகனூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாது:

நாமக்கல் மாவட்டம், மோனூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்க உள்ள பகுதிகளான வளையப்பட்டி, லத்துவாடி, பரளி, ஆண்டாபுரம் ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம். ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளதாக தகவல் உள்ளது. இதனால் ஆயிரக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கிணறுகள் பாதிக்கப்படும். நிலம் எடுக்கும்போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். எனினும் இதுவரை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. இதில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் எடுப்பதில் தான் ஆட்சேபனையாக உள்ளது. விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டுமென்பதற்காக ஆய்வு செய்தோம். சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டிபோராட்டத்தில் ஈடுபடுவோம்.

தற்போது நிலம் கையகப்படுத்த உள்ள இடத்தின் அருகே, ஏற்கனவே சிட்கோவிற்கு எடுக்கப்பட்ட நிலம் கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எந்த பயன்பாட்டிற்கும் நிலம் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல் நகராட்சி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் தூசூர் ஏரியில் கலக்கச் செய்கிறது. இதனால் ஆயிரக்கணககான விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக மாற்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். சங்க துணைத் தலைவர்கள் துளசிமணி, லகுமையா, மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஏஐடியுசி செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் பேட்டியின்போது உடனடிருந்தனர்.

Updated On: 25 May 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...