/* */

ஆக.28 ல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல்

நாமக்கல்லில் உள்ள சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது

HIGHLIGHTS

ஆக.28 ல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்துக்கு  புதிய நிர்வாகிகள் தேர்தல்
X

பைல் படம்

நாமக்கல்லில் உள்ள சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் கேஸ் டேங்கர் லாரிகளை இயக்கி வரும், சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது 2022-2025ம் ஆண்டுக்கான புதியநிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க தலைவர், உபதலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் மற்றும் 75 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் வருகிற 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 11ம் தேதி வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 12, 13 தேதிகளில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். 13ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். வருகின்ற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும். நிர்வாகிகள் தேர்தலில் பதிவான ஒட்டுக்கள் அன்று மாலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் 29ம் தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Updated On: 3 Aug 2022 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்