/* */

செல்லப்பம்பட்டி ஆர்.ஐ அலுவகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

செல்லப்பம்பட்டி ஆர்ஐ அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் செய்து, பார்வையிட்டார்.

HIGHLIGHTS

செல்லப்பம்பட்டி ஆர்.ஐ அலுவகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

செல்லப்பம்பட்டி ஆர்ஐ அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் செய்து, பார்வையிட்டார்.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றிற்காக அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், இண்டர்நெட் மூலம் பெறுவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. அரசின் இ – சேவை மையம் மூலமாக ஆன்லைனில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வாரிசு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், விதவை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் மற்றும் 5 வகையான உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை பெறலாம்.

இந்த சான்றிதழ்கள் வழங்கும் பணியில் இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் விஏஓ மூலம் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கும் நிலையில், ஆர்ஐக்கு செல்லும். ஆர்ஐ ஆவணங்களை பார்வையிட்டு ஒப்புதல் வழங்கும் நிலையில், தாசில்தாரின் இண்டர்நெட் முகவரிக்கு சென்று சான்றிதழ் ஒப்பளிப்பு செய்யப்படும். விண்ணப்பித்தவர் ஒப்பளிப்பு செய்யப்பட்ட சான்றிதழ்களை இ-சேவை மையங்களிலோ அல்லது தங்களது கம்ப்யூட்டரிலோ டவுன் லோடு செய்துகொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ) அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சரிபார்த்தார். பொதுமக்களின் விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். பின்னர் கரையான்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். கருங்கல்புதூர் ரேசன் கடையை பார்வையிட்ட கலெக்டர் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து சரிபார்த்தார்.

Updated On: 17 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை