/* */

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு

நாமக்கல் நகராட்சியில், கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு
X

நாமக்கல் நகராட்சி ராமாபுரம்புதூர், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில், டிரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. தொற்று அதிகம் பாதித்த 13 பகுதிகளில் கட்டுபாட்டு மண்டலம் அமைக்கப்பட்டது. அங்கு காய்ச்சல் முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால் தொற்று குறைந்து 13 கட்டுப்பாட்டு மண்டலம் 8 மண்டலமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 240 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றை தடுக்கும் வகையில் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் பகுதியில், டிரோன் கருவி மூலம் வீதிகளிலும், வீடுகளுக்கு மேலும் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், இந்தப்பணியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ள கணேசபுரம், இபி காலனி, என்ஜிஓ காலனி, ஜெட்டிகுளத்தெரு, கணபதி நகர், தில்லைபுரம், துறையூர் ரோடு மற்றும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம் பகுதியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Updated On: 24 Jun 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!