/* */

சத்துணவு மைய காலிப்பணியிடங்களை நிரப்ப ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீரமானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

சத்துணவு மைய காலிப்பணியிடங்களை நிரப்ப ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை
X

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், 10வது மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடேசன் ஆகியோர் துவக்கி வைத்துப் பேசினார்கள். மாநில துணைத்தலைவர் அமுதா கோரிக்கை குறித்து விளக்கினார்.

கூட்டத்தில், சத்துணவு மையங்களில், 1,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் சிரமம் உள்ளது. அவற்றை தவிர்க்க, காலிப்பணியிடங்களை உடனடடியாக நிரப்ப வேண்டும். காலிப்பணியிடம் நிரப்பும் முன், தொலைவில் சென்று பணியாற்றும் அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு, அருகில் உள்ள மையங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு, பென்சன் மாதம் ரூ. 2,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தகுதிக்கேற்ப மத்திய அரசு அறிவித்துள்ள, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பவை உள்ள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில், மாவட்ட தலைவராக தங்கராஜ், துணைத்தலைவர்களாக சந்திரசேகரன், தமிழரசி, செயலாளராக நடேசன், பொருளாளராக சாந்தி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 26 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  3. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  4. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  7. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  8. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  10. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...