/* */

தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் தேக்கம் : ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலை

தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் தேக்கம் : ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலை
X

நாமக்கல் கோழிப்பண்ணை மாதிரி படம்.

கொரோனா முழு லாக்டவுனால் கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டு பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் பண்ணையாளர்களுக்கு இதுவரை ரூ.800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லடம், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராய்லர் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள பிராய்லர் கோ ஆர்டினேசன் கமிட்டி (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கொள்முதல் விலை என்பது, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில், அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை. கடந்த 1ம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி ரூ. 68 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக உயர்ந்து, கடந்த 24ம் தேதி 1 கிலோ ரூ. 84 ஆக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று, ஒரே நாளில் ரூ. 22 சரிந்து ஒரு கிலோ ரூ. 62 ஆக குறைந்துள்ளது. இது கறிக்கோழிப் பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும், 2 கோடி கிலோ கறிக் கோழி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தளர்வில்லா லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் கறிக்கோழி விற்பனை அடியோடு சரிந்துவிட்டது. இதனால் பண்ணையகளில் கோழிகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், பண்ணைகளில் கோழியின் எடை அதிகரித்துள்ளது.

குஞ்சு விடுவதற்கு போதிய இடம் இல்லை. கோழிகளை விற்பனை செய்து பண்ணையில் இருந்து வெளியே அனுப்பினால் மட்டுமே, புதிய கோழிக் குஞ்சுகளை வாங்கி பண்ணையில் வளர்க்க முடியும். கடந்த, ஆண்டு கறிக்கோழி உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு ரூ. 60 ஆக இருந்தது. தற்போது தீவன மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் உற்பத்தி செலவும் ஒரு கிலோ ரூ. 100 -க்கும் அதிகமாகிறது. இதனால், கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஒரு வாரத்துக்கு ஏற்கனவே ரூ. 100 கோடி இழப்பு ஏற்பட்டநிலையில், தற்போது ரூ. 200 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் இத்தொழிலில் ரூ. 800 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், இந்த தொழிலே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இப்பிரச்னையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, காய்கறி விற்பனை செய்வது போல், கறிக்கோழியை, இரவில் சுத்தம் செய்து, ஒரு கிலோ, இரண்டு கிலோ என பேக்கிங் செய்து வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் எங்கள் மூலம், பரவாமல் இருக்க, முழு கவச உடையுடன் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து விற்பனை செய்ய உறுதியளிக்கின்றோம்.

இது குறித்து முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, கால்நடைத்துறை அமைச்சர், துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கறிக்கோழி வளர்ப்பு தொழில் நலிவடையாமல் காப்பாற்ற முடியும்.இது, உயிர் உள்ள பொருள், இடையில் தீவனம் அளிக்காமல் தொழிலை நிறுத்தி வைக்க முடியாது. இதற்கு மேலும் பண்ணைகளில் கறிக்கோழி தேக்கம் ஏற்பட்டால் ரூ. 1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு பலர் இத்தொழிலை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Updated On: 27 May 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...