/* */

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி மூட்டை ரூ.55 லட்சத்திற்கு ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 2,000 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி மூட்டை ரூ.55 லட்சத்திற்கு ஏலம்
X

நாமக்கல் என்சிஎம்எஸ் கூட்டுறவு செசைட்டியில் விற்பனைக்கு  குவிந்துள்ள பருத்தி மூட்டைகள் 

நாமக்கல் :

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 2,000 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் என்சிஎம்எஸ் கூட்டுறவு செசைட்டியில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல், பரமத்தி, மோகனூர், எருமப்பட்டி, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் சுமார் 2,000 பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.

சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, அவினாசி, கோவை பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். மொத்தம் 2 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 899 முதல் ரூ.8 ஆயிரத்து 141 வரையிலும், டி.சி.எச்.ரக பருத்தி ரூ.7 ஆயிரத்து 900 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையிலும், கொட்டுப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 199 முதல் ரூ.5 ஆயிரத்து 599 வரையிலும் ஏலம் போனது.

Updated On: 4 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்