/* */

கம்யூ., பிரமுகர் கொலை வழக்கில் கந்துவட்டி கும்பல் 6 பேருக்கு இரட்டை ஆயுள்

நாமக்கல் கம்யூ., பிரமுகர் கொலை வழக்கில் கந்துவட்டி கும்பல் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

கம்யூ., பிரமுகர் கொலை வழக்கில் கந்துவட்டி கும்பல் 6 பேருக்கு இரட்டை ஆயுள்
X

வேலுசாமி (பழைய படம்).

பள்ளிபாளையத்தில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில், கப்யூனிஸ்ட் பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 6 பேருக்கு நாமக்கல் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சிவக்குமார் என்பவர் கந்து வட்டி தொழில் நடத்தி வந்துள்ளார். பள்ளிப்பாளையத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இவரிடம் ரூ. 1000/- கடன் பெற்றுள்ளதை பயன்படுத்தி அவரை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்தோடு, தனது உதவியாளர் ஆமையன் என்பவரையும் வரவழைத்து அவரையும் அப்பெண்ணிடம், பாலியல் வன்முறையில் ஈடுபடச் செய்துள்ளார்.

கொடூரத்தின் உச்சமாக இந்த பாலியல் வன்முறையை சிவக்குமார் வீடியோவில் பதிவு செய்துள்ளார். தொடக்கத்திலிருந்தே தன்னை விட்டு விடுங்கள், நான் பணத்தை உடனே கொடுத்து விடுகிறேன் என அந்த பெண் கெஞ்சி அழுததையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. வீடியோவை அழித்து விடுங்கள் என அந்த பெண் மன்றாடி கேட்டுள்ளதை ஏற்க மறுத்து, இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு கேவலப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.

கலெக்டர், எஸ்பியிடம் புகார்:

அடுத்த சில நாட்களில் அந்தவீடியோவை ஒரு ஆபாச வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்டு பதறிய அந்த பெண்ணும், அவருடைய தாயாரும் என்ன செய்வது என்று தெரியாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஊழியரான வேலுச்சாமி என்பவரை சந்தித்து, தங்களை காப்பாற்றும்படி கோரியுள்ளனர். வேலுச்சாமியும் மற்றும் சில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் மாவட்ட கலெக்டரிடமும், எஸ்.பியிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயர் அதிகாரிகள் மீது புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த சிவக்குமார், அடியாட்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்த, கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வேலுச்சாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்தியது.

சிபிசிஐடி விசாரணை:

கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. வேலுச்சாமி கொலை வழக்கை விசாரணை செய்திட ராஜன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர் விசாரணை மேற்கொண்டிருக்கும்போது, பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட பெண் இவரிடம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து புகார் அளித்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் அவருடைய உதவியாளர் ஆமையன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோர்ட் தீர்ப்பு :

ராஜன் விசாரணையை முடித்து அவர் அளித்த குற்றப்பத்திரிகையின் மீது நாமக்கல் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நாமக்கல் மகிளா கோர்ட்டு நீதிபதி சசிரேகா தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் சிவக்குமார், மிலிடரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ராஜேந்திரன் ஆகிய 5 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் மற்றும் ரூ.2,000 ரூ அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் ஒரு குற்றவாளி ஆமையன் ஏற்கனவே இறந்தவிட்டார், மற்றொரு குற்றவாளி பூபதி தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6து குற்றவாளியான பூபதி தலைமறைவான நிலையில் அவருக்கும் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளியான ஆமையன் கொலை செய்யப்பட்டதால், முதல் குற்றவாளியான, சிவக்குமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிவக்குமார் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார். மற்றவர்கள் ஜாமினில் வெளியே உள்ள நிலையில் 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!