/* */

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்தை மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நேரில் ஆய்வு

குமாரபாளையத்தில், 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்தை  மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நேரில் ஆய்வு
X

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 16ம் தேதி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

குமாரபாளையத்தில் வருகிற 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக, போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய அளவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தை சுற்றிலும் இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங், காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணியினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும், பார்வையிட்டார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக, மைதானத்தில் தேங்காய் நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

நிகழ்ச்சியில், திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 April 2023 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...