/* */

ராசிபுரம்: விதிமீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு தடை

ராசிபுரத்தில், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு, கொரோனா சிகிச்சைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

ராசிபுரம்: விதிமீறி செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு தடை
X

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளில், அரசு நிர்ணயித்த கட்டண விதிமுறைகள் மீறப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கலெக்டருக்கு வந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கெரோனா விதிகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் அந்த ஆஸ்பத்திரிக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, நோயாளிகளுக்கு அந்தப் பணத்தைத் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெற்றால் ஆஸ்பத்திரியின் அங்கீகாரம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அந்த ஆஸ்பத்திரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பரிசோதனை மையங்களில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டன. நாமக்கல்லில் அனுமதி பெறாத ஒரு பரிசோதனை மையத்தில், நோயாளிகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 July 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!