/* */

மன நலத்திட்டத்தின் சார்பில் ஆட்டிசம் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவ ட்ட மன நலத்திட்டத்தின் சார்பில் உலக ஆட்டிசம் வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மன நலத்திட்டத்தின் சார்பில் ஆட்டிசம் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சின்னமுதலைப்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி பேசினார்.

நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில், உலக ஆட்டிசம் வாரத்தை முன்னிட்டு, சின்ன முதலைப்பட்டி அங்கன்வாடிமையத்தில் படிக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் அரசு மனநல மருத்துவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: குழந்தைகள் மற்றவர்களை விட்டு ஒதுங்கி தனிமையில் இருப்பது, மனதளவில் சுணக்கமாக இருப்பது, மற்ற குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளாமலும் விளையாடமலும் இருப்பது. தனிமையில் நேரத்தை செலவிட முனைவது, விரும்புவது, சில நேரங்களில் பெயர் சொல்லி அழைத்தாலும், காது கேளாதவர் போல் திரும்பி பார்க்காமல் பதிலளிக்காமல் இருப்பது ஆட்டிசத்தின் அறிகுறியாகும். மேலும், ஆர்வமுள்ள விஷயங்களை சுட்டிக்காட்ட, குறிப்பாக பெரியவர்களின் கையை உபயோகிப்பது, எந்த முயற்சியும் செய்யாமல் இயந்திரத்தனமாக பெரியவர்களின் உதவிய நாடுவது, கண்ணோடு கண் தொடர்பை தவிர்ப்பது, ஒரு சில பொருள்களின்மேல் மட்டும் திரும்ப திரும்ப பிரியம் வைப்பது, இந்த பிரியம் சில நேரங்களில் பொருத்தமற்றதாக தோன்றலாம். வழக்கத்திற்கு மாறாக தலையை முட்டிக்கொள்வது, கைகளை அடித்துக்கொள்வது போன்ற நடத்தையை வெளிப்படுத்துவதும் ஒருவிதமான ஆட்டிசம் நோயின் அறிகுறிகளாகும்.

தொடப்படாமலும், கட்டிப்பிடிக்கப்படாமலும், அரவனைக்கப்படாமலும் இருக்க விரும்புவது, சில நேரங்களில் அதை சங்கடமாக உணர்வது. கற்பனை நாடக விளையாட்டு விளையாட இயலாதது, சாதாரண கற்ப்பித்தல் முறைகளில் கற்றுகொள்ள இயலாமல் இருப்பது. வழக்கமான கற்பித்தல் முறைகள் குழந்தையின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்காது.

விசித்திரமான சிறப்புத்திறன்கள், சில விசித்திரமான செயல்களை செய்தல் போன்வற்றில் உங்கள் குழந்தைகள் ஈடுபட்டால் அவர்களை நன்றாக கவனித்து வரவேண்டும். அவர்களின் நடத்தையில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச்சென்று, டாக்டர்களை அனுகி தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அழகம்மாள், மனநல ஆலோசகர் ரமேஷ், உளவியாளர் அர்ச்சனா, நர்சுகள் மார்கிரேட் பிலோமினா, அம்பிகா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 4 April 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?