/* */

தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசின் அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

உலக மகளிர் தினமான மார்ச் 8-ல், 2022ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதினைப் பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலன் சார்ந்த, பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான சேவை புரிந்த விபரம் 1 பக்க அளவில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் உரிய கருத்துரு (புக்லெட்- 2) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரம் அனுப்ப வேண்டும். விதிமுறைகளின்படி உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள், தங்கள் கருத்துருவினை வரும் 27ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...