/* */

நாமகிரிப்பேட்டையில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

நாமகிரிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டையில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் 27ம் தேதி நாமகிரிப்பேட்டையில் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, அண்ணா வெள்ளி வார சந்தை சமுதாய நலக்கூடத்தில், வருகின்ற 27ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யுடிஐடி பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பணிக்கு செல்பவர் மற்றும் கல்வி பயில்பவர்களுக்கு இலவச பஸ் பாஸ், வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 25 Feb 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!