/* */

75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

நாமக்கல்லில், 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 1,000 மாணவ,- மாணவியர் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

HIGHLIGHTS

75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
X

நாமக்கல்லில், 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, 1000 மாணவ, மாணவியர் 1 மணி நேரம் சிலம் சுற்றி சாதனை படைத்தனர்.

நாமக்கல்லில், 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சிலம்பம் பயிற்சி பெற்ற, 1,000 மாணவ,- மாணவியர் பங்கேற்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி, மாவட்ட நேரு யுவ கேந்திரா, பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்று சிலம்பம் சுற்றினர். சிலம்ப பயிற்சியாளர்களின் கட்டளைக்கு ஏற்ப பல்வேறு விதமான சிலம்ப ஆட்டங்களை, அவர்கள் வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, ஒரு மணி நேரம், இடைவெளியின்றி, பல்வேறு சிலம்பக் கலைகளை, போட்டியாளர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி சாதனைபுரிந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதமாதா சிலம்பம் பயிற்சி பள்ளித் தலைவர் டாக்டர் எழில்செல்வன், மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினர் தில்லைசிவக்குமார், சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?