/* */

நாமக்கல்லில் மக்கள் நீதிமன்றத்தில் 2,382 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற, லோக்அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் 2,382 வழக்குகளில் ரூ.18.92 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மக்கள் நீதிமன்றத்தில் 2,382 வழக்குகளுக்கு தீர்வு
X

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன், வழக்கு நிவாரண உத்தரவுகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார். விபத்துகள், பேங்க் செக், குடும்ப நலம், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாடு என, பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும், சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.

குறிப்பாக, நாமக்கல் மாவட்டம், மோகனூர் முத்துராஜாதெருவை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி, ரேவதி, சாலை விபத்தில் உயிரிழந்தார்.இது சம்மந்தமான வழக்கு பைசல் செய்யப்பட்டு, அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கியது. மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என, வேறுபாடு கிடையாது. இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது, மேல்முறையீடு செய்ய இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மாவட்டத்தில், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி நீதிமன்றத்திலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,337 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 2,382 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 18 கோடியே, 92 லட்சத்து, 8,986 ரூபாய் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

Updated On: 13 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்