/* */

நாமக்கல் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 1.40 லட்சம் புத்தகப் பைகள் தயார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக 1.40 லட்சம் புத்தகப் பைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 1.40 லட்சம் புத்தகப் பைகள் தயார்
X

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 3 வண்ணங்களினால் ஆன புத்தகப்பை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக 1.40 லட்சம் புத்தகப் பைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகப்பைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக 1.40 புத்தகப்பைகள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, மாணவர்களுக்குவழங்கப்படும் புத்தகப் பைகளில், தமிழக முதல்வரின் படம், முன்னள் முதல்வரின் படம், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெறும். இந்த ஆண்டு இதுபோன்ற தலைவர்களின் படங்கள் இல்லாமல், கல்வி சார்ந்த திருக்குறளுடன் 3 வண்ணங்களில் இந்த பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்ததும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, புத்தகப் பைகள், பேனா, பென்சில் வைப்பதற்கான பெட்டிகள் போன்ற 14 பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்படும்.

இதன்மூலம், தமிழகத்தில் உள்ள அரசு சார்ந்த 37 ஆயிரம், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு, மாணவர்களுக்கு தரமான புத்தகப் பைகளை வழங்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் உள்ளிட்ட புகைப்படங்கள் ஏதுமின்றி புத்தகப் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பைகளின் மேல் புறத்தில், கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்க்கு, மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளும், அதற்கான கருப்பொருளும் அச்சிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்துக்கு மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 604 புத்தகப் பைகள் வந்துள்ளன. இவை, மாவட்ட கல்வி அலுவலகத்திலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,079 பள்ளிகளைச் சேர்ந்த 1,40,604 மாணவ, மாணவிகளுக்கு அரசின் புத்தகப் பைகள் வழங்கப்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையில் (சிறிய வடிவிலான பை) 27,649 பேருக்கும், 4 முதல் 7-ஆம் வகுப்பு வரையில் (நடுத்தர வடிவிலான பை) 48,964 பேருக்கும், 8 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் (பெரிய வடிவிலான பை) 63,991 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. புத்தகப் பைகள் அனைத்தும் வந்து சேர்ந்து விட்டது. சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில் அவற்றின் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Sep 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  3. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  4. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  5. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  6. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  8. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  9. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  10. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!