/* */

நாமக்கல் மாவட்டத்தில் 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில்வருகிற 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
X

பைல் படம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் வருகிற 13-ம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு பெறலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்