/* */

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.5.30 ஆக நிர்ணயம்

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா உயர்ந்து ஒன்றுக்கு விலை ரூ. 5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.5.30 ஆக நிர்ணயம்
X

பைல் படம்

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 10 பைசா உயர்ந்து, என்இசிசி மூலம் மைனஸ் இல்லாத விலையாக ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 590, பர்வாலா 461, பெங்களூர் 580, டெல்லி 483, ஹைதராபாத் 515, மும்பை 575, மைசூர் 585, விஜயவாடா 500, ஹொஸ்பேட் 540, கொல்கத்தா 552.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.148 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

Updated On: 17 Jun 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!