/* */

பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை அமைப்பு

பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை   கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை அமைப்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற, பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம், உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல்நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:-

அண்டை மாநிலமான கேரளா மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், பண்ணையின் நுழைவு வாயிலில் சிறிய தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில்குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைக்க வேண்டும். பண்ணைக்குள் வருபவர்களும், வாகனங்களும் அந்த கரைசலில் கால்களை நனைத்துச் செல்லவேண்டும். மேலும், பண்ணை வளாகம் முழுவதும் உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 47அதிவிரைவுப்படை குழுக்கள் (RRT Team) அமைக்கப்பட்டு கோழிப்பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு கோழிப்பண்ணையாளர்கள் சுத்தம் செய்திட வேண்டும். வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில், அசாதாரணமாக கோழிகள் இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழி மற்றும் கோழியினப்பொருட்கள் போக்குவரத்தினை அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும், நீர் இருப்பு பகுதிகளில் ஏற்படும் அசாதாரணமான இறப்புகளை உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். இந்நோய் குறித்து நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை/

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாராயணன், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலார் வல்சன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2024 10:25 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்