/* */

நாமக்கல் நகராட்சியில் அதிமுக வாஷ் அவுட்...

நாமக்கல் நகராட்சியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒருவரும் திமுகவில் ஐக்கியமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் அதிமுக வாஷ் அவுட்...
X

நாமக்கல் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ரோஜாரமணிக்கு சால்வை அணிவித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திமுகவில் இணைத்து கொண்டார்.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. நகராட்சி தேர்தலில் 22 மற்றும் 25வது வார்டுகளில் திமுக ஆதரவு பெற்ற சுயேச்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 37 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாஜக, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பல வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் கொசவம்பட்டி பகுதிக்கு உட்பட்ட, அதிமுக நிர்வாகி மெடிக்கல் சுரேஷ் என்பவரின் மனைவி ரோஜாரமணி, 29வது வார்டில் அதிமுக சார்பில் போடியிட்டு வெற்றி பெற்றார். நகராட்சியில் அதிமுக சார்பில் இவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற் விழாவுக்கு முன்னதாக 29வது வார்டு கவுன்சிலர் ரோஜாரமணி, அவரது கணவனர் மெடிக்கல் சுரேஷ் ஆகியோர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். பின்னர் அவர் திமுக உறுப்பினர்களுடன் இணைந்து ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒருவரும் திமுகவில் ஐக்கியமானதால், நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது. இதனால் நாமக்கல் நகராட்சியில் அதிமுக வாஷ் அவுட்டானது.


Updated On: 2 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’