/* */

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை விரட்டியடித்த பேருந்து நிலைய கடையினர்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில், தங்கள் கடைகள் முன்பு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை உரிமையாளர்கள் விரட்டியடித்தனர்.

HIGHLIGHTS

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை விரட்டியடித்த பேருந்து நிலைய கடையினர்
X

குமாரபாளையம்  பேருந்து நிலைய கடைகள் முன்பு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை விரட்டியடித்த உரிமையாளர்கள். 

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடையினர் தங்கள் கடை முன்பு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நபர்களை விரட்டியடித்தனர்.

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இவர்கள் பல ஊர்களிலிருந்து வந்தவர்களும் உள்ளனர். பலரால் கொண்டு வந்து இங்கு விடப்பட்டவர்களும் உள்ளனர். வயது முதிர்வு, ஆதரவு இல்லாமை, கடும் நோய், ஆகிய காரணங்களால் இவர்கள் இங்கு விடப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலைய கடைகள் முன்பு இரவு நேரத்தில் படுத்து தூங்குபவர்கள், பகலில் கடை திறக்கும் நேரம் வந்தாலும் எழுந்திருப்பதில்லை. மேலும் கடை முன்பே சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளை செய்து வருகின்றனர்.

இதனால் நோய்கள் பரவல் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் வந்து எழுந்திருக்க சொன்னாலும் எழுந்திருப்பதில்லை. பலவிதமான காரணங்களால் பேருந்து நிலைய கடையினர் இதுபோன்ற சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நபர்களை விரட்டியடித்தனர். இவர்களை பாதுகாப்பு மையத்தில் சேர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுதுள்ளனர்.

Updated On: 19 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்